அலமாதி அரசு மாதிரி பள்ளியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
அலமாதி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி.
Social Awareness Program -பொன்னேரி அடுத்த சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான்சன்கென்னடி தலைமையில் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பீன்ஜான்வர்கீஸ் மற்றும் மனநல மருத்துவர் அன்புதுரை ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி கல்வித்துறையின் சிறப்பு திட்டத்தீன் கீழ் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சமுதாயத்தில் காணப்படும் போக்சோ, போதை, குழந்தை திருமணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து வளரிளம் பருவ மாணவ,மாணவியர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதனை பல்வேறு நிபுணர்களுடன் இணைந்து மாணவ-மாணவியர்களிடையே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், எண்ணூர் சரக காவல் உதவி ஆணையர் பிரம்மானந்தம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் மோகனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலன் உட்பட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu