சோழவரம் அருகே 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சோழவரம் அருகே 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியுடன் அதிகாரிகள்.

Ration News - அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, சரக்கு வாகனம், கார் என 3வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Ration News - திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆங்காடு கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையிலான வருவாய் துறையினர் ஆங்காடு கிராமத்தில் தீவிர சோதனை நடத்தினர். அங்குள்ள ராஜாமணி அரிசி ஆலை என்ற ஆலையில் சோதனை நடத்திய போது அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை பாலிஷ் செய்து வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக ஆந்திர பதிவெண் கொண்ட லாரியில் ஏற்றி இருந்ததும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரிசி ஆலையில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 50 டன் ரேஷன் அரிசியை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, சரக்கு வாகனம், கார் என 3வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அரிசி ஆலையில் பணியாற்றிய வட மாநில தொழிலாளர்கள் ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரிசி ஆலையின் உரிமையாளர் குறித்தும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு