தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலை

தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலை
X

கொலையுண்ட காவலாளி முரளி 

பொன்னேரி அருகே தனியார் நிறுவன காவலாளி அடித்துக் செய்யப்பட்டார்.

பொன்னேரி அருகே தனியார் நிறுவன காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சக காவலாளியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முரளி (48). இவர் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். வழக்கம் போல முரளி பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சக காவலாளி உதயா என்பவருக்கும், முரளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறி உதயா அருகில் இருந்த உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கியதில் முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காட்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பியோடிய சக காவலாளி உதயாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன காவலாளி சக காவலாளியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்