ஆரணி பகுதியில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

ஆரணி பகுதியில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை
X

 அரசுப் பேருந்து உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு மாணவர்கள்

பல்வேறு பகுதிகளில் இருந்து இலவச பயணச்சீட்டு வைத்துதான் ஆரணிக்கு வந்து பள்ளியில் பயின்று செல்கின்றனர்

பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் இங்கு அரசு ஆண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகள் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் பெரியபாளையம் கொசவன் பேட்டை காரணி புதுப்பாளையம் பல்வேறு பகுதிகளில் இருந்து இலவச பயணச்சீட்டு வைத்துதான் ஆரணிக்கு வந்து பள்ளியில் பயின்று செல்கின்றனர்.

இந்நிலையில் மாலை மற்றும் காலை நேரங்களில் வீடுகளுக்குச் செல்ல, சில பேருந்துகளில் மாணவர்களை ஏற்றுவதில்லை என்றும், சில பேருந்துகள் மட்டும் மாணவர்களை அனுமதிப்பதும், அதில் பொதுமக்கள் பலர் பயணம் செய்வதால் மாணவர்கள் பேருந்து உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்டு கொண்டு மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!