ஆரணி பேரூராட்சியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்...

ஆரணி பேரூராட்சியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்...
X

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆரணி பேரூராட்சி பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் சமீபத்தில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் தொடர் மழை காரணத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில், நிவாரணப் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரெட் கிராஸ் சொசைட்டியின் பொன்னேரி வட்ட கிளை செயலாளர் சித்ரா சுரேந்தர் தலைமையில், ஆரணி பேரூராட்சி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள், கரண்டி, பிளேட், டம்ளர், கிண்ணம், கத்தி, சமைக்கும் பெரிய பாத்திரம், தார்பாயிலின் ஆகியவை அடங்கிய தொகுப்பினை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் சித்ரா சுரேந்தர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பொன்னேரி வட்ட கிளை துணைத் தலைவர் சுரேந்தர், ஹெல்த் கமிட்டி சேர்மன் சஞ்சீவி உட்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்ட ஆரணி பேரூராட்சி பகுதி மக்கள் ரெட் கிராஸ் சொசைட்டிக்கு தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
business ai microsoft