பொன்னேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

பொன்னேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

பொன்னேரியில் 2024 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன்.

பொன்னேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வெளியிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 2024 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பொன்னேரி கோட்டத்தில் அடங்கியுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

இரண்டு தொகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களான 641 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 349 பள்ளிகளில் பொது மக்களின் பார்வைக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலானது ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உள்ளது.

இந்த பட்டியலில் பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் இடமாற்றம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பொன்னேரி கனகவல்லி, கும்மிடிப்பூண்டி ஜெயச்சந்திரன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் வாக்காளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai future project