பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் சுமார் 30நிமிடத்திற்கும் மேலாக இன்று மிதமான மழை பெய்தது. தொடர்ந்து 2வது நாளாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும் 2வது நாளாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருவள்ளூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், செங்குன்றம், ஆரம்பாக்கம், பாலவாக்கம், மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சுமார் 30நிமிடத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. 2வது நாளாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் இன்றி குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!