லாரி மோதியதால் மீஞ்சூரில் ரயில்வே கேட் சேதம்: ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

லாரி மோதியதால்  மீஞ்சூரில் ரயில்வே கேட்  சேதம்: ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி
X

மீஞ்சூரில் ரயில்வே கேட் மீது லாரி மோதியதால் ரயில்வே கேட் திறக்க முடியாமல் போனதால் மக்கள் அவதி

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்கத்தில் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே இந்த ரயில்வே கேட் அமைந்துள்ளது.

மீஞ்சூரில் ரயில்வே கேட் மீது லாரி மோதியதால் ரயில்வே கேட் திறக்க முடியாமல் போனதால் 30 நிமிடத்திற்கும் மேலாக ரயில்கள் தாமதமானதுடன், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் 1மணி நேரம் அவதிப்பட நேரிட்டது.

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்கத்தில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இன்று இந்த ரயில்வே கேட்டை மதுபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் இடித்து விட்டு நிற்காமல் பஜார் நோக்கி சென்றார். இதனையடுத்து உடனடியாக ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் சென்னை - கும்மிடிப்பூண்டி இரு மார்கங்களிலும் புறநகர் ரயில் சேவை சுமார் 30நிமிடங்கள் கால தாமதமாக இயக்கப்பட்டன.

லாரி இடித்ததில் சேதமடைந்த ரயில்வே கேட் திறக்கப்படாமல் இருந்ததால் மீஞ்சூரில் இருந்து காட்டூர், தத்தைமஞ்சி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் ரயில்வே கேட்டில் அணிவகுத்து நின்றன. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்ற நிலையில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக கனரக வாகனங்கள், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் ரயில்வே கேட் திறக்கப்பட்டதை தொடர்ந்து வாகனங்கள் ரயில் பாதையை கடந்து சென்றன. கடந்த பல ஆண்டுகளாக ரயில்வே உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், லாரி இடித்து கேட் சேதமடைந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே ரயில்வே கேட்டை இடித்து விட்டு சென்ற லாரி மீஞ்சூர் பஜாரில் மீண்டும் ஒரு காரை இடித்ததால் லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மது போதையில் இருந்த லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு