மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அகத்தீஸ்வரர் கோவிலில் ரத சப்தமி பூஜை..!

மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அகத்தீஸ்வரர் கோவிலில் ரத சப்தமி பூஜை..!

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அகத்தீஸ்வரர் கோவிலில் ரதசப்தமி பூஜை செய்யப்பட்டது.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டி பாஜக சார்பில் பொன்னேரி அருகே அகத்தீஸ்வரர் கோவிலில் ரத சப்தமி பூஜை நடைபெற்றது.

பொன்னேரி அருகே நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டி பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் பாஜக சார்பில் ரத சப்தமி சிறப்பு பூஜையுடன், சூரிய பகவானின் சக்தி மோடிக்கு பூரணமாக கிடைத்திட பிரார்த்தனை செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பாஜக சார்பில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டி ரத சப்தமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

தீவிர சிவபக்தனான ராவணனை போரில் வெல்வதற்காக ராமனுக்காக அகத்திய முனிவர் ரத சப்தமி பூஜை நடத்தி ஆதித்ய பாராயணம் செய்து சூரிய பகவானை வழிப்பட்டதாகவும் பின்னர் நடைபெற்ற இறுதிப்போரில் ராமபிரான் ராவணனை வீழ்த்தியதாகவும் ராமாயணத்தில் கூறப்படுகிறது.

இவ்வளவு சக்தி வாய்ந்த ரத சப்தமி பூஜையை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதியபடி நடத்தி ஆதித்ய பாராயணம் செய்து சிவசூரியனை வழிப்பட்டனர்.இதனை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனிதநீரால் சூரிய பகவானுக்கு அபிஷேகம் செய்து மஹாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் பாஜக செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர் ஜானகிராமன், அரசு தொடர்புத்துறை மாநில தலைவர் எம்.பாஸ்கரன், மாவட்ட துணைத்தலைவர் லயன் எஸ்.ரவிக்குமார், ஒன்றிய தலைவர் ஜெயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பாஜகவினர் இதே கோவிலில் மோடி பிரதமராக வேண்டி ரத சப்தமி பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story