புனிதவெள்ளி: பொன்னேரியில் சிலுவை தியான ஊர்வலம்
பொன்னேரியில் புனிதவெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் போதகர்கள் சார்பில் சிலுவை தியான ஊர்வலம் நடைபெற்றது.
புனிதவெள்ளியை முன்னிட்டு பொன்னேரியில் சிலுவை தியான ஊர்வலம். ஏராளமான கிறிஸ்தவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புனிதவெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளின் போதகர்கள் சார்பில் சிலுவை தியான ஊர்வலம் நடைபெற்றது. தடப்பெரும்பாக்கத்தில் உள்ள ஆல்மைட்டி காட் திருச்சபையில் துவங்கிய இந்த ஊர்வலத்தை ஊராட்சிமன்ற தலைவர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்
இயேசு கிருஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் தத்ரூபமாக, இயேசுநாதர் வேடமணிந்த ஒருவர் சிலுவையை சுமந்தபடி டிராக்டரில் வைத்து ஊர்வலத்தின் முன்னே சென்றார். அவரை தொடர்ந்து கிறிஸ்துவின் நாமத்தை போற்றி பாடல்கள் பாடியவாறு மேளதாளம் முழங்க கிறிஸ்தவ பெருமக்கள் அணிவகுத்து நடந்து சென்றனர். இந்த ஊர்வலம் வேண்பாக்கம், டி.எச் ரோடு, தாயுமான் தெரு, ஹரிஹரன் கடைவீதி, தேரடி முக்கிய வீதி வழியாக சென்ற ஊர்வலம் பாரத ஸ்டேட் வங்கி அருகே நிறைவடைந்தது. இதில் திருச்சபைகளின் போதகர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu