மண் குவாரியை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை
பைல் படம்
பொன்னேரி அருகே சவுடு மண் குவாரியில் அதிக அளவில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு. இந்த கோரியில் மண் ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து. மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தில் சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. சவுடு மண் குவாரியால் விவசாயம், குடிநீர் பாதிப்படையும் என விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சவுடு மண் குவாரிக்கு தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோளூர் ஏரியில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி ஒன்று ஆவூர் கிராமம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் வாகனத்தை அப்புறப்படுத்தினர். பள்ளி மாணவர்கள் செல்லும் நேரங்களிலும் சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் இந்த சவுட்டு மண் கோரையில் அரசு விதிகளுக்கு புறம்பாக நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகளில் சவுட்டு மண் ஏற்றுக்கொண்டு மின்னல் வேகத்தில் செல்வதால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இது மட்டுமல்லாமல் பள்ளி நேரங்களிலும் குவாரி இயங்கக்கூடாது என்றும், நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான லாரிகளில் மண் ஏற்றி செல்வதால் இந்த ஏரியை சுற்றி பயன் பெற்று வரும் நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் நிலத்தடி நீர் பாதிப்பு குறைவதால் விவசாயத்திற்கு தேவையான நீருக்கு எடுப்பதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும். எனவே இந்தக் கோரியை படுத்து நிறுத்த வேண்டும் என்று கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu