பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏ.வழங்கல்
பொன்னேரி அருகே மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம் எல் ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்.
பொன்னேரி அருகே மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும்149 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில் 11,மற்றும்12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார்,மாவட்ட கல்வி அலுவலர் முகமது அப்துல்லா, துணை தலைவர் அலெக்சாண்டர்,துனை தலைமை ஆசிரியர் கே.சுசிலா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 149 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சுப்ரமணி,ராஜேந்திரன்,வார்டு உறுப்பினர்கள் துரைவேல் பாண்டியன்,அபுபக்கர், கவிதா சங்கர்,கவிதா சேகர், பரிமளா அருண் குமார்,காங்கிரஸ் நிர்வாகிகள் புருஷோத்தமன், நந்தகுமார்,ராமமூர்த்தி, குருசாலமன், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இலவச சைக்கிள் திட்டம் ஓர் மீள் பார்வை...
தமிழக அரசு 2022ஆம் ஆண்டிற்கான இலவச சைக்கிள் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், அரசு பள்ளிகள் அல்லது தமிழக அரசால் நிர்வகிக்கப் படும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், வாகனம் இல்லாமல் பள்ளிக்கு வருவதற்கு சிரமப்படும் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் கிடைக்கும். இலவச சைக்கிள்களால் ஏராளமான மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் பள்ளிக்கு வந்து சேர முடியும்.
இலவச மிதிவண்டித் திட்டம் முதன் முதலில் பெண் மாணவர்கள் கல்வியைத் தொடர ஊக்குவிக் கும் வகையில் தொடங்கப்பட்டது. 2001-02 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்தத் திட்டம் முன்பு உயர்நிலைக் கல்வி படிக்கும் எஸ்சி / எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இருந்தது. முந்தைய திட்டம் அரசாங்கத்திற்கு வெற்றிகரமாக இருந்ததால், தற்போது தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாலினம் மற்றும் சாதி வேறுபாடின்றி இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மற்றும் ஐடிஐ மாணவர்கள் - அரசுப் பள்ளிகளில் படிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். பள்ளிகளைத் தவிர, மாநிலத்தில் உள்ள தொழில் துறை பயிற்சி நிறுவனங்கள் அல்லது ஐடிஐகளில் படிக்கும் தேர்வர்கள் விண்ணப்பித்து இந்த இலவச சைக்கிளை தமிழக அரசிடமிருந்து பெறலாம்.
மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை: 11.78 லட்சம் விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறமுடியும் என்று சுமாரான மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கையில் பள்ளிகளைச் சேர்ந்த 5.06 லட்சம் மாணவர்களும் 6.49 லட்சம் பெண் மாணவர்களும் உள்ளனர். ஐடிஐ களில் இருந்து சுமார் 18,506 விண்ணப்பதாரர்கள் இந்த இலவச சைக்கிளைப் பெற முடியும் என கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu