நகராட்சி ஆணையரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!
koppu padam
பொன்னேரி நகராட்சி ஆணையர் ₹.2கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக கூறி நகராட்சி அலுவலகம் எதிரே சமூக ஆர்வலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பொன்னேரி நகராட்சியின் ஆணையராக கோபிநாத் என்பவர் இருந்து வருகிறார்.திமுகவை சேர்ந்த பரிமளம் விஸ்வநாதன் என்பவர் பொன்னேரி நகர்மன்ற தலைவராக உள்ள நிலையில் அதிமுகவை சேர்ந்த விஜயகுமார் என்பவர் நகர்மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பொன்னேரி நகராட்சி ஆணையராக இருந்து வரும் கோபிநாத் நகராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளில் ஊழல் செய்துள்ளதாக கூறி நகராட்சி அலுவலகம் எதிரே சமூக ஆர்வலர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பணிகளில் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், நகராட்சியில் உள்ள 27வார்டுகளில் உள்ள சாலை,கால்வாய்,குளம், தூய்மை பணிகள் என முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், சுமார் ₹.2கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக புகார் கூறி முழக்கங்களை எழுப்பினர்.
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து ஊழல் செய்துள்ள நகராட்சி ஆணையர் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu