கல்லூரி புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை..!

கல்லூரி புதிய  கட்டிட திறப்பு விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பில்லை..!
X

காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் நடந்த கறுப்புக்கொடி ஏந்திய போராட்டம்.

பொன்னேரியில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிய கூடுதல் கட்டிடத் திறப்பு விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகளை அழைக்காததை கண்டித்து பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னேரி அரசு கலைக் கல்லூரியில் காமராஜர் துறைமுக நிறுவனத்தால் 5.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். பாஜக அரசின் கைப்பாவையாக காமராஜர் துறைமுக நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் சுமார் 4000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் இங்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப வகுப்பறைகளை அமைக்கும் வகையில் காமராஜர் துறைமுக நிர்வாகத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்ட நிதி 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் இங்கு கட்டப்பட்டது.


பொன்னேரி அரசு கலைக் கல்லூரியில் கட்டப்பட்ட 15 வகுப்பறைகள் கொண்ட கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால், மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டு இந்த கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முன்னதாக கல்லூரியில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்காக வருகை தந்த காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் வாகனத்தை பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் வழிமறித்தனர்.

அரசு கல்லூரியில் கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழாவிற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறி வாகனத்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தலைமையிலான அதிகாரிகள் கல்லூரிக்குள்ளே சென்று கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கைகளில் கருப்பு கொடி ஏந்தி காமராஜர் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் நிறுவனமாக செயல்படும் காமராஜர் துறைமுக நிர்வாகம் பாஜக அரசின் கைப்பாவையாக, தன்னிச்சையாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார். மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏ, எம்பி, தலைவர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் தன்னிச்சையாக இந்த திறப்பு விழா நடப்பது கண்டிக்கத்தக்கது என குற்றம் சாட்டினர். தொடர்ந்து காவல்துறையினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் எம் எல் ஏ காவல்துறை சமரச பேச்சுவார்த்தை ஏற்க மறுத்தார்.

தொடர்ந்து எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடிகளுடன் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் எம்எல்ஏவிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக வந்தார். அப்போது எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் துறைமுக நிர்வாகத்தை கண்டித்து தொடர்ந்து கண்டனம் முழக்கங்களை எழுப்பியதால் காமராஜர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்திய ஆகியோர் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ கருப்பு கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?