பொன்னேரி ஊரடங்கு பணி போலீசாருக்கு முககவசம் வழங்கிய தன்னார்வலர்கள்!

பொன்னேரி ஊரடங்கு பணி போலீசாருக்கு முககவசம் வழங்கிய தன்னார்வலர்கள்!
X

ஊரடங்கு பணிகளில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் முகக் கவசங்கள் வழங்கினர்.

கொரோனா ஊரடங்கு பணிகளில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் முகக் கவசங்கள் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், இதிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தளர்வில்லாத ஊரடங்கு பணிகளில் காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினர் அயராது ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களது உடல்நலத்தை கருத்தில் கொண்டு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஏற்பாட்டில் சமூக ஆர்வலர்கள் ஜெ.குரு, சாலமோன், காமராஜ், அபுபக்கர், ரமேஷ், ராஜா, ஜெயக்குமார், அஜய், விமல், சதீஷ் உள்ளிட்டோர் மீஞ்சூர், காட்டூர் திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு முகக் கவசங்கள் அளித்தனர்.

திருப்பாலைவனம் காவல் உதவி ஆய்வாளர் சாந்தி முகக் கவசங்கள் பெற்றுக்கொண்டு காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!