பொன்னேரி புதிய அரசு கல்லூரி கட்டிடம் : வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறப்பு

பொன்னேரி புதிய அரசு கல்லூரி கட்டிடம் :  வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறப்பு
X

 பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

பொன்னேரி அரசு கல்லூரியில் அறிவியல் துறைகளுக்காக 11கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறக்கப்பட்டது

பொன்னேரி அரசு கல்லூரியில் அறிவியல் துறைகளுக்காக 11கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடம். முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் உள்ள அறிவியல் துறைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக 11கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தினை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இயற்பியல், வேதியல், தாவர விலங்கியல் துறைகளுக்கான தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 36வகுப்பறைகளை கொண்ட இந்த கட்டிடத்தில் வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தெரிவித்தார். பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன். ஆகியோர் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்..




Tags

Next Story
ai in future agriculture