புதிய மின்மாற்றிகளை பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்த பொன்னேரி எம்எல்ஏ

புதிய மின்மாற்றிகளை  பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்த பொன்னேரி எம்எல்ஏ
X

பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் 

புதிய மின்மாற்றிகளை பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்

பொன்னேரி அருகே நான்கு இடத்தில் 20.25 மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகளை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர், நெய்த வாயல், நந்தியம்பாக்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் குறைந்த மின்சாரம் வந்து கொண்டிருந்தது. இந்தக் குறைந்த மின் ஆயத்தும் காரணத்தினால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மின்வாரிய துறையிடம் சட்டமன்ற உறுப்பினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதனை மின் பகிர்மான வட்டம் தண்டையார்பேட்டை மீஞ்சூர் உட்கோட்டத்தில் மேற்கொண்ட பகுதிகளுக்கு 4.25 லட்சம் மதிப்பீட்டில் நெய்த வாயல், ஐஸ்வர்யா நகர், புதுப்பேடு பகுதியில்4.25 லட்சம் மதிப்பீட்டில், கே.ஆர்.பாளையம் கிராமத்தில் 4.25 மதிப்பீட்டிலும், நல்லூர் ஊராட்சியில் ரூபாய்7 லட்சம் ஆகிய நான்கு இடங்களில் மொத்தம் ரூபாய் 20.25 மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகளை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு நான்கு இடங்களில் ரிப்பன் வெட்டி மின்மாற்றி களை மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்.

இதில் மின்வாரிய துறை அதிகாரிகள் பாண்டியன், விஸ்வநாதன்,குமார், சுரேஷ், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ரகு, நெய்த வாயல் ஊராட்சி மன்ற தலைவர் பாலன்,நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன், வார்டு உறுப்பினர்கள் தசரதன், அஸ்வின், சுபஸ்ரீ, நாகப்பன், திருணா, ரத்தினம், வரதராஜ், தினேஷ், வள்ளி, விஸ்வநாதன், விக்னேஷ், மற்றும் கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு