பொன்னேரி: சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மது கடத்திய 2 பேர் கைது!

பொன்னேரி: சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மது கடத்திய 2 பேர் கைது!
X

சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

பொன்னேரி அருகே சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மது கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 42 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 42 மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆவடியை சேர்ந்த ரகுமான் (29), ராஜன்பாபு (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!