பொன்னேரி: ஆண்டார்குப்பம் கோவில் உண்டியலில் திருட்டு: சிசிடிவி கேமராவில் பதிவு!

பொன்னேரி: ஆண்டார்குப்பம் கோவில் உண்டியலில் திருட்டு: சிசிடிவி கேமராவில் பதிவு!
X

சிசிடிவில் பதிவான, மர்ம நபர் உண்டியலை உடைக்கும் காட்சி 

பொன்னேரி ஆண்டார்குப்பம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணியன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் விதிகளின்படி தினந்தோறும் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் பூஜை செய்வதற்கு சென்ற போது உண்டியல் அருகே சில்லரைகள் சிதறி இருந்ததை கண்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் கோவில் உண்டியலில் கம்பியை வைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture