காவல்துறை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதி மன்றப் புறக்கணிப்புப் போராட்டம்
பைல் படம்
பொன்னேரி உள்ள 6 நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வளரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நடுவர் நீதிமன்றம் உள்ளிட்ட 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் 6நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொன்னேரி காவல்துறையை கண்டித்து பொன்னேரி காவல் நிலையத்தில், திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதா கவும், அது தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை இல்லை எனக்கூறி காவல்துறையை கண்டித்து, நேற்று, பொன்னேரி நகராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி காவல் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று எஸ்,ஐ.-க்கள் மற்றும், 32 காவலர்கள் என மொத்தம், 36 பேர் இருக்க வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்ப காவலர்களின் எண்ணிக்கை உயர்த்திருக்க வேண்டும்.மாறாக தற்போது, பொன்னேரி காவல் நிலையத்தில், 10க்கும் குறைவான காவலர்களே உள்ளனர். இதனால் பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. காவலர் பற்றாக்குறையை காரணம் காட்டி பல்வேறு திருட்டு வழிப்பறி சம்பவங்கள், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றின் மீது நடவடிக்கை இன்றி கிடக்கிறது.பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
பொன்னேரி காவல் நிலையத்தினை ஆவடி காவல் கமிஷனரகத்துடன் இணைத்து போதிய காவலர்களை நியமிக்கவும், போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வளரை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.இதையடுத்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களிடம் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியாசக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிட்டு கலந்து சென்றனர் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu