காவலரை தாக்கியதாக 2 இளைஞர்கள் கைது

காவலரை தாக்கியதாக 2 இளைஞர்கள் கைது
X

பொன்னேரி அருகே ரோந்து பணியின் போது காவலரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

பொன்னேரி அருகே ரோந்து பணியில் இருந்த காவலரை தாக்கியதாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்

பொன்னேரி அருகே ரோந்து பணியின் போது காவலரை தாக்கியதாக 2 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் காவலர்களாக பணி புரியும் பெரியசாமி மற்றும் முகமது ஆசிக் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்போது, மீஞ்சூர் பஜாரில் குடிபோதையில் 2 இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டிருந்தனர், அவர்களை சமாதானப்படுத்தி அவர்களது இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போது, காவலர் பெரியசாமியை அந்த இளைஞர்கள் கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து, அங்கு விரைந்து வந்த மற்ற காவலர்கள் அந்த 2 பேரையும் கைது செய்து, அவர்களது இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும், பிரதீப்(25) என்பவர் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருவதாகவும், விக்னேஷ்(26) என்பவர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. காவலரை தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு