பொன்னேரி மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்ற துப்புரவு பணியாளர்கள்

பொன்னேரி மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்ற துப்புரவு பணியாளர்கள்
X

உறுதிமொழி ஏற்ற துப்புரவு பணியாளர்கள்.

தூய்மைப் பணி மற்றும் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தொழுநோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

பொன்னேரி அரசு தலைமை மருத்துவமனையில் சமூக நல ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் தூய்மைப் பணி மற்றும் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தொழுநோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பொன்னேரி ரயில் நிலைய சாலையில் அரசு தலைமை மருத்துவமனைஉள்ளது. இந்த அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் டாக்டர் அனுரத்னா வேண்டுகோளை ஏற்று, நேற்று செங்குன்றம் எலைட் பள்ளி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் செபாஸ்டின் தலைமையில் சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு, பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் கோபிநாத், தமிழ்சிங்கம் லயன்ஸ் சங்கத் தலைவர் பீலிக்கான், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் நண்பன் அபுபக்கர், எலைட் பள்ளி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் துப்புரவு பணி மேற் கொண்டு முட்புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினர். முடிவில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தொழுநோய் குறித்த விழிப்பு உணர்வு மற்றும் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!