பொங்கல் பண்டிகைக்கு சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.. !
சிறுவாபுரி முருகன் அலங்காரத்தில்.
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் மற்றும் தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3.மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் . அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் பெருமளவில் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகினர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் பண்டிகை தினம் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம்,50 ரூபாய்,100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோவிலுக்கு வெளியே வெயிலில் நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும்,திருமண தடை நீங்க வேண்டும், அரசியல்,ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே விஐபி தரிசனம் எனக்கூறி பொதுமக்களிடையே இடைத்தார்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தினால் முதியோர்கள், குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பு பக்தர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.
இது குறித்து பக்தர்கள் தெரிவிக்கையில்,
இன்று தை செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய வந்தோம். கும்பாபிஷேகத்தை அடுத்து செவ்வாய்க்கிழமை நாட்களில் சாமி தரிசனம் தொடர்ச்சியாக செய்து செல்வதாகவும், ஆனால் தற்போது எவ்வித அடிப்படை வசதிகள் ஆலயத்தின் சார்பில் செய்து தராத காரணத்தினால் குழந்தைகள் முதியோர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது மட்டுமல்ல விஐபி தரிசனம் என்ற பெயரில் பணம் அதிகமாக வசூலித்து அவர்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் சாமானிய மக்கள் சாமி தரிசனம் செய்வது மிக கடினமாக மாறி உள்ளது.
எனவே இந்து சமய அறநிலையத்துறை கண்டுகொண்டு ஆலயத்திற்கு வரும் சாமானிய மக்கள் எரிதாக தரிசனம் செய்ய வழிவகை செய்து தர வேண்டும் எனவும், பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகளையும் அதேபோல் சாலை இரு புறம் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் பக்தர்கள் வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதாகவும், விழா நாட்களில் பெரிதாக போலீஸ் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் போக்குவரத்து நெரிசலும், பக்தர்கள் தரிசனம் செய்ய மிகக் கடினமாக மாறியதாக பக்தர்கள் தெரிவித்தனர் எனவே சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் வைக்கும் கோரிக்கைகளை ஏற்று அடிப்படை வசதிகளை செய்து தருவார்களா என கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu