பெரியாபளையம் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு திடீர் ஆய்வு!
பெரியபாளையம் கோவிலில் தயாரிக்கப்படும் உணவின் தரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி இல்லை. பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லாத நிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் சார்பில் கோவில்களில் வழங்கப்படும் உணவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் சமைக்கப்படும் உணவு திருவள்ளூர், கச்சூர், ஊத்துக்கோட்டை, பெரம்பூர், பெரியபாளையம், வெள்ளியூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில் இன்று தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பெரியபாளையம் கோவிலுக்கு திடீரென நேரில் சென்று உணவு சமைக்கும் இடங்களை ஆய்வு செய்தார். மேலும் உணவின் தரத்தை சரிபார்த்தார். உணவு பொட்டலங்களை தயார் செய்யும் முறைகள் குறித்தும் உணவின் அளவு குறித்தும் கோவிலின் நிர்வாக அறங்காவலர் லோகமித்ரனிடம் சில அறிவுரைகளை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu