அத்திப்பட்டு புது நகரில் சாலை தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து அமைக்க வேண்டும் தூர்வாரிஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
அத்திப்பட்டு புதுநகரில் நீர்நிலைஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து ஊருக்குள் வெள்ள நீர் செல்லாதவாறு50 லட்சம் செலவில்400 மீட்டர் தூரத்திற்குஅமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவரை 100 அடி அகலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க வேண்டும். ஒப்பந்ததாரருக்கு துணை போகக் கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் தாழ்வான பகுதி என்பதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில் .அங்குள்ள தாங்கள் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில், வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் 50 அடி அகலத்திற்கு மட்டுமே 400 மீட்டர் தூரம் அமைக்கப்படுவதால் 100 அடி அகலத்திற்கு முழுவதுமாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து அமைக்க வேண்டும் தூர்வாரிஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . அப்போது, அங்குவந்த திமுக மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, மற்றும் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் ஆகியோருக்கும் பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
பின்னர், ஒப்பந்ததாரர்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் நிறுத்தி விட்டுச் சென்றனர். 100 அடி அகலத்திற்கு வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுப்புச் சுவர் உயரமாக அமைக்க வேண்டும் என வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவசர கதியில் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பணிகள் நடைபெற அரசு அதிகாரிகள் துணை போவதாகவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu