மீஞ்சூர் அருகே குறைந்த மின் சப்ளை : பொதுமக்கள் புகார்..!

மீஞ்சூர் அருகே குறைந்த மின் சப்ளை : பொதுமக்கள் புகார்..!
X

புகாரளிக்க வந்துள்ள ராஜீவ்காந்தி நகர் மக்கள்.

மீஞ்சூர்,ராஜீவ் காந்தி நகரில் இரவு நேரத்தில் குறைமின்சாரம் சப்ளை செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மீஞ்சூர் நந்தியம்பாக்கம் அருகே ராஜீவ் காந்தி நகரில் இரவில் குறைந்த மின் சப்ளை காரணமாக அவதிப்படுவதாக மீஞ்சூர் அடுத்த மேலூர் மின்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஓரிரு நாட்களில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்துக் கொடுப்பதாக மின் துறை அதிகாரிகள் உறுதிஅளித்துள்ளதாக தெரிவித்தனர்.

'திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நந்தியம்பாக்கம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார்1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் குறைந்த வோல்ட்டேஜ் அளவிலான மின் சப்ளை காரணமாக இரவில் வீட்டு உபயோக பொருட்களான மின்விசிறி,டிவி,மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதாகி விடுகின்றன.

மேலும் குறைந்த அளவிலான மின்சாரம் வருவதால் வீட்டில் மின்விசிறி பயன்படுத்தமுடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மழைக்காலம்வேறு என்பதால் கொசுத் தொலைவெறி இருக்கிறது. மின்விசிறி ஓடினாள் மட்டுமே கொசுத் தொல்லைக்கு ஆளாகாமல் நிம்மதியாகத் தூங்க முடியும்.

மின்விசிறி சரியாக இயங்காததால் இரவில் குழந்தைகள், வயதான முதியோர்கள், மற்றும் நோயாளிகள் நிம்மதியாக தூங்க முடியவில்லை எனவும், இது குறித்து இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்துறைக்கு பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். தற்போது வரையில் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் இன்று மீஞ்சூர் அருகே மேலூரில் அமைந்துள்ள துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் உதவி செயற்பொறியாளரிடம் இது குறித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களுடன் கலந்து பேசிய அதிகாரிகள் இன்னும் ஒருசில நாட்களுக்குள் புதிய மின்மாற்றி அமைத்து சீரான மின்சாரம் வழங்கி தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story