ரயில் நிலையத்தில் உள்ள கழிவறையை திறக்க பயணிகள் கோரிக்கை.
பொன்னேரி ரயில் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் கழிவறை
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ரயில் நிலையம் உள்ளது. பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தினந்தோறும் சென்னை, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் விளைவிக்கும் காய்கனிகள் பூக்களை உள்ளிட்டவை வியாபாரத்திற்கும் சென்னைக்கு கொண்டு செல்வார்கள்,
இது மட்டுமல்லாமல் பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காக செல்பவர்கள் என பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கும் ஆந்திரா சூளூர்பேட்டை, நாயுடு பேட்டை, கூடூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.
ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு வழங்கும் இடம் அருகே வாசலில் உள்ள, பயணிகளுக்காக கட்டி முடிக்கப்பட்ட கழிவறை கட்டிடம் நீண்ட நாட்களாக பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் அன்றாடம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், குறிப்பாக பெண்கள் கழிவறை பூட்டியபடி இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆண்களாவது பரவாயில்லை, இயற்கை உபாதைக்காக ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களை பயன்படுத்தி கொள்கின்றனர். பெண்களின் நிலைமைதான் பரிதாபமாக உள்ளது.
எனவே பயணிகளின் நலன்கருதி பூட்டியுள்ள கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வேத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கண்டு கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu