அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் புதிய மின்மாற்றியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த எம்எல்ஏக்கள்

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் புதிய மின்மாற்றியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த எம்எல்ஏக்கள்
X

திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர்களை எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர்.

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் எம். ஜி.ஆர் நகர் பகுதியில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏக்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 10 ஆண்டு காலமாக அடிப்படை வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா. செல்வசேகரன் முயற்சியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற கோவிந்தராஜன் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் இணைந்து புதிய மின் மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!