பாலவாக்கம் இருளர் இன மக்களுக்கு நேரில் சென்று சாதி சான்றிதழை வழங்கிய கோட்டாட்சியர்

பாலவாக்கம்  இருளர் இன மக்களுக்கு நேரில் சென்று சாதி சான்றிதழை வழங்கிய கோட்டாட்சியர்
X
திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கத்தில் உள்ள இருளர் இனமக்களுக்கு கோட்டாட்சியர் சாதி சான்றிதழை நேரில் வழங்கினார்.
பாலவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி நேரில் சென்று சாதி சான்றிதழை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பாலவாக்கம் ஊராட்சியில் ஜே.ஜே நகர் பகுதியில் இருளர் இன மக்கள் கடந்த வருடம் சாதி சான்றிதழை கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள்.

கொரோனா தோற்றால் அவர்களால் சாதி சான்றிதழ் பெறாத நிலையில் இருந்தது. இதை அறிந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி இன்று 34 பேருக்கு சாதி சான்றிதழை அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வழங்கினார்.

இதில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராமன், கிராம நிர்வாக அதிகாரி, பாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!