ஓம் மகா மாய சக்தி கோயிலில் புரட்டாசி திருக்குடை உற்சவம்..!

ஓம் மகா மாய சக்தி கோயிலில் புரட்டாசி திருக்குடை உற்சவம்..!
X

தஜிறுக்குடை ஊர்வலம்.

பொன்னேரி அருகே அத்திப்பட்டு ஓம் மகா மாயா சக்தி கோயிலில் நடைபெற்ற 2ஆம் ஆண்டு புரட்டாசி திருக்குடை உற்சவத்தில் திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்றார்.

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. 2024ல் ஆரம்பித்து 2026ல் முதலமைச்சர் என கூறி திமுகவை ஆரம்பிக்கவில்லை என நடிகர் விஜய்யை மறைமுகமாக டி.கே.எஸ்.இளங்கோவன் சாடினார்.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள ஓம் மகா மாயா சக்தி கோயிலில் நடைபெற்ற 2ஆம் ஆண்டு புரட்டாசி திருக்குடை உற்சவத்தில் திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக பரவும் தகவல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பதவி கொடுக்கைவில்லை என கூறுகிறார்களே, கடந்த மாதம் ஆவணியில் 15முகூர்த்த நாட்கள் வந்ததே எனவும், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் முடிவு செய்தால் அது முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என தெரிவித்தார்.


நேரம் காலம் பார்ப்பதல்ல 3மாதங்களாகவே இந்த பேச்சு சுற்றி வருகிறது என்றார். அரசியலில் எதையேனும் பேச வேண்டும் என்பதற்காக நியாமில்லாமல் திமுகவிற்கு இழுக்கு தேடித் தர வேண்டும் பேசுகிறார்கள் என்றார். கட்சியில் அனைத்து பதவிகளையும் ஒரு குடும்பமே வைத்து கொள்வதாக சீமானின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரை சேர்ந்தவர், பொருளாளர் டி.ஆர்.பாலு தஞ்சாவூரை சேர்ந்தவர், முதன்மை செயலர் கே.என்.நேரு திருச்சியை சேர்ந்தவர், தான் தஞ்சாவூர், ஆர்.எஸ்.பாரதி ஆலந்தூரை சேர்ந்தவர், துணை பொது செயலாளர்களில் கனிமொழியை தவிர மற்றவர்கள் வெவ்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள்.

ஒரு சில பதவிகளை மட்டும் வைத்து குற்றம் சாட்ட முடியாது எனவும், மேலும் அந்த குடும்பம் கட்சிக்காக பாடுபட்ட குடும்பம் எனவும் அதனை மறந்து விட கூடாது எனவும், 1952ஆம் ஆண்டு திமுக தேர்தலில் கூட போட்டியிடாத காலத்திலேயே கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தி சிறை சென்றதாக தெரிவித்தார்.

இப்போதெல்லாம் போராட்டம் செய்தாலே 15நாட்கள் சிறை என அறிவித்தால் பாதி தலைவர்கள் கட்சியையே ஆரம்பிக்க மாட்டார்கள் எனவும், 8ஆண்டுகள் தேர்தல் பற்றி கவலைப்படாமல் அதற்கு பிறகு திமுக தேர்தல் அரசியலில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது என்றார்.

1949ல் ஆரம்பித்து 1952ல் முதலமைச்சர் என கூறவில்லை எனவும், 2024ல் ஆரம்பித்து 2026ல் முதலமைச்சர் என கூறி கட்சியை ஆரம்பிக்கவில்லை என நடிகர் விஜய்யை மறைமுகமாக சாடினார். திருமாவளவன் மதுவிலக்கு தொடர்பாக கூட்டம் நடத்தி 3வது அணி அமைக்க உள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு அதற்கு எதற்காக எங்களை அழைத்தார் எனவும், திமுக சார்பில் தான் அந்த மாநாட்டில் நாங்கள் பங்கேற்க உள்ளோம் எனவும் கூறினார்.

3வது அணி கிடையாது என்றார். அதானி துறைமுக விரிவாக்கம் குறித்த கேள்விக்கு ஒன்றிய அரசு அதானிக்கு அடிமை அரசு தான் எனவும், மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள் என சாடினார். மக்களை பற்றி கவலைப்படாத ஒன்றிய அரசு எனவும், கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாகவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து இதற்கு எதிராக குரல் கொடுத்து வருவதாக கூறினார்.

தற்போது ஆட்சியில் இருப்பதால் போராட்ட களத்தில் இறங்காமல் நாடாளுமன்றத்தில் வலிமையாக எதிர்த்து வருவதாக கூறினார். மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தை மீஞ்சூர் வரை நீட்டிப்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்போது கூறினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது