சாலையோர கடைகள் அகற்றிய விவகாரத்தில் பேச்சு வார்த்தைக்கு வராத அதிகாரிகள்

சாலையோர கடைகள் அகற்றிய விவகாரத்தில் பேச்சு வார்த்தைக்கு வராத அதிகாரிகள்
X

சாலையோர ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி

செங்குன்றத்தில் சாலையோர கடைகள் அகற்றம் விவகாரம் சார் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதிகாரிகள் ஏன் வரவில்லை என வியாபாரிகள் புகார்

செங்குன்றம் பகுதியில் சாலையோர கடைகளை அகற்றும் விவகாரம் தொடர்பாக சார் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை என அழைத்து அதிகாரிகள் யாரும் வரவில்லை என புகார். நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அதிகாரிகள் நடந்து கொள்வதாக புகார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் திருவள்ளூர் கூட்டுசாலை முதல் பஜார் பகுதி வரை சாலை ஆக்கிரமிப்புள்ளதாக கூறி நெடுஞ்சாலை துறையினர் கடந்த மாதம் 27-ஆம் தேதி சாலையோர கடைகளை அகற்றினர். இதற்கு சாலையோர நடைபாதை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாலையோர கடைகளை அப்புறப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட சிறுகடை நடைபாதை வியாபார அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வரிடம் நீதிகோரி கோட்டையை நோக்கி இன்று நடைபயணம் செல்ல செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டுசாலையில் குவிந்தனர். அங்கு சென்ற செங்குன்றம் காவல் துறையினர் நடைபயணம் மேற்கொள்ள இருந்த சாலையோர வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காவல் துறை கூறியதை தொடர்ந்து தற்காலிகமாக நடைப்பயணத்தை ஒத்திவைத்தனர். இந்நிலையில் சாலையோர வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தைக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். சார் ஆட்சியர் வெளியே சென்றுவிட்டதாக அதிகாரிகள் கூறியதால் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

30 ஆண்டுகளாக சாலையோர வியாபாரம் செய்து வரும் தங்களை கணக்கெடுத்து 2014-இல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி, அங்கீகரித்து அடையாள அட்டை வழங்கி வியாபாரம் செய்யும் அதிகாரத்தை வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியதாகவும், ஆனாலும், தொடர்ந்து சாலையோர வியாபாரிகள் இன்னலுக்கு ஆளான நிலையில், கடந்த 2015-இல் திருவள்ளூர் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் 6*4 என்ற அளவில் கடைகளை நடத்தி அடையாள அட்டைகள் வழங்க பேரூராட்சிக்கு உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை எனவும் கூறினர்.

மேலும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிகாரிகளை செயல்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். போராட்டத்தை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை என வரவழைத்து அதிகாரிகள் வெளியே சென்றுவிட்டதாக கூறுவதாகவும், செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை வருமாறு கூறியுள்ள நிலையில் அதிகாரிகள் உரிய தீர்வு வழக்காவிடில் போராட்டம் மட்டுமின்றி நீதிமன்றம் மூலமும் முறையிடுவோம் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!