புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்புவிழா: எம்எல்ஏ பங்கேற்பு..!

புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்புவிழா: எம்எல்ஏ பங்கேற்பு..!
X

மீஞ்சூரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார மையக் கட்டிடத்தை திறந்து வைக்கும் எம்.எல்.ஏ துரை சந்திரசேகர்.

மீஞ்சூரில் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை எம்எல்ஏ துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்.

மீஞ்சூர் பேரூராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார மையக் கட்டிடத்தை எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூராட்சி, ஒன்பதாவது வார்டு லால் பகதூர் சாஸ்திரி தெருவில் 2022-23 பதினைந்தாவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகம் கட்டிடம் கட்டப்பட்டது.

அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் மகேந்திரவர்மன்,பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு,துணைத் தலைவர் அலெக்சாண்டர், வார்டு உறுப்பினர் துரைவேல் பாண்டியன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் சங்கீதா சேகர், நக்கீரன், அபூபக்கர், கவிதா சங்கர், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் கோபி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய ஆரம்ப சுகாதார நிலையம் இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சுகாதாரம் பொதுமக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக சுகாதாரம் என்பதில் மருத்துவம் சார்ந்த பணிகள் முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. தமிழக அரசு மாநிலம் முழுவதும் கிராமங்களில் மருத்துவ சேவையை விரிவுபடுத்தி வருகிறது.

மக்கள் சுகாதாரமான வாழ்க்கை வாழ்வதற்கும் மருத்துவ சேவைகளை கட்டணமில்லாமல் பெறுவதற்கும் இந்த சுகாதார நிலையங்கள் கிராம மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன.குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இந்த திட்டம் நல்ல பயனுள்ளது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!