எண்ணூர் துறைமுகத்தின் புதிய நிர்வாக இயக்குநர் பொறுப்பேற்பு

எண்ணூர் துறைமுகத்தின் புதிய நிர்வாக இயக்குநர் பொறுப்பேற்பு
X

 எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஐரீன் சிந்தியா ஐஏஎஸ் பொறுப்பேற்று கொண்டார்.

எண்ணூர் துறைமுகத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஐரீன் சிந்தியா ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்

பொன்னேரி அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஐரீன் சிந்தியா, ஐஏஎஸ் பொறுப்பேற்று கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் கார்கள், மின்னணு சாதனங்கள், நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளை கையாண்டு ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகிறது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த சுனில் பாலிவால் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டு ஐரீன் சிந்தியா ஐ.ஏ.எஸ். புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து காமராஜர் போர்ட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஐரீன் சிந்தியா ஐ.ஏ.எஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். 2008ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் கேடர் அதிகாரியான ஐரீன் சிந்தியா, முன்னதாக மத்திய பிரதேச அரசில் நிதித்துறையின் இயக்குனராக பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story