ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Robbery Case- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே போந்தவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவரம் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி மாரி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி புனிதா மூன்று மகள் உள்ளனர் இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மாறி வேலைக்கு சென்ற நிலையில் இவரது மனைவி புனிதா மூன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து வீட்டை பூட்டிக்கொண்டு 100 நாள் வேலைக்குச் சென்றுள்ளார். இவர்களது மகள் ஜனனி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவை உடைக்கப்பட்ட நிலையில் கண்டு உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 18 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது உடனடியாக ஜனனி பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தார் .
தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது பீரோவில் நகை போனது தெரிய வந்தது இது குறித்து ஆரணி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர் பட்டப்பகலில் வீட்டை பூட்டை உடைத்து நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu