பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா!
பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி விழாவின் நிறைவுநாளில் அம்பாள் மகிஷாசுர மர்த்தினி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் நாளான நேற்று ஆனந்தவல்லி தாயார் பராசக்தி அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனம் அளித்தார். இதனை தொடர்ந்து நவராத்திரி விழாவின் நிறைவுநாளான நேற்று உச்சவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், குங்கும அர்ச்சனை, மஞ்சள் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அம்மனுக்கு திரு ஆபரணங்களாலும் கண்ணை கவரும் மலர் அலங்காரத்தில் கைகளில் சூலாயுதம் எந்தி மகிஷாசுர மர்த்தினி அவதாரத்தில் ஆக்ரோஷமாக எழுந்தருளினார்.மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் வேதமந்திரம் ஓதி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.இதையடுத்து அம்பாளுக்கு புஷ்பரத ஆராதனையும், மஹாதீபாராதனையும் காட்டப்பட்டது.
அம்மனுக்கு நெய்வேத்தியம் படைக்கப்பட்டு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் அருளை பெற்று சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu