தீமிதி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி..!

தீமிதி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி..!
X

முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பந்தக்கால் நாடும் நிகழ்ச்சி 

பொன்னேரி முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பந்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னேரியில் முத்துமாரி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும்விழா. பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு முத்துமாரி அம்மன் கோயில் 34.ஆம் ஆண்டு ஆடி மாத தீமிதி திருவிழா வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பந்தக்கால் நடும்விழா இன்று காலை கோவில் வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.விரதமிருந்து மஞ்சளாடை அணிந்த பெண்கள் பந்தக்காலை நட்டு வைத்தனர்.

பின்னர் முத்துமாரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், ஜவ்வாது, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இன்று இரவு பந்து கட்டுதல், நவசாந்தி நிகழ்வு நடைபெற உள்ளது.இதையடுத்து தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படுகிறது.

பின்னர் எல்லை புறப்பாடு நடைபெறும். இதனை தொடர்ந்து கரக வீதிவுலாவும் கூழ் ஊற்றல் நிகழ்வும் நடைபெற உள்ளது.வரும் ஞாயிறன்று அலகு பானை கொண்டு வரும் நிகழ்வும் முத்துமாரி அம்மனுக்கு தாய் வீட்டு சீர் கொண்டு வரும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விழாவின் சிறப்பம்சமான காப்பு கட்டி விரதமிருந்த குமாரமக்கள் அக்னி குண்டம் இறங்கும் விழாவும் ஊஞ்சல் சேவை விழாவும் நடைபெற உள்ளது.இன்று நடைபெற்ற பந்தக்கால் நடும் விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags

Next Story