பாடியநல்லூரில் அரசு பள்ளியில் ரூ 40 லட்சத்தில் புதிய கட்டிடம்;எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

பாடியநல்லூரில் அரசு பள்ளியில் ரூ 40 லட்சத்தில் புதிய கட்டிடம்;எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
X

பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமையவுள்ள ரூ 40 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடத்திற்கு எம்எல்ஏ சுகதர்சனம் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அரசு பள்ளியில் ரூ 40 லட்சத்தில் கட்டப்படும் புதிய கட்டிடத்திற்கு எம்எல்ஏ சுதர்சனம் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம், சென்னை வடக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ. 40லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

புதி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சென்னை வட கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ். சுதர்சனம் அடிக்கல் நாட்டினார்.

இதில் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை தலைவருமான. கருணாகரன், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்