அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ஆய்வு.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ
பொன்னேரி அரசு மருத்துவமனையில் செயல்படாமல் முடங்கி கிடக்கும் ரத்த வங்கி, மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட புகார்கள் குறித்து அதிகாரிகளுடன் காங்கிரஸ் எம்எல்ஏ திடீர் ஆய்வு.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் அதிகாரிகளுடன் சென்று திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார். பொன்னேரி அரசு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடப்பது குறித்து எம்எல்ஏ துரை,சந்திரசேகருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
மேலும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை என அரசு மருத்துவமனை மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசு மருத்துவமனையில் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் பூட்டப்பட்ட நிலையில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று அங்கு உள்ள உபகரணங்கள் குறித்து அரசு மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாததால் அதனை முறையாக பயன்படுத்த முடியாதது குறித்து அப்போது எம்எல்ஏவிடம் எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய எம்எல்ஏ துரை.சந்திரசேகர் பொதுமக்களின் உடல்நலம் சார்ந்த மருத்துவமனை கட்டமைப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்க கூடாது எனவும் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் சுகாதார பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
மேலும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu