அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகள்
X
மீஞ்சூர் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் நிலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்

மீஞ்சூர் அடுத்த சகாய மாதா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 192 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி எம்எல்ஏ துரை சந்திரசேகர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த சகாய மாதா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது, இவ்விழாவிற்கு மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், தலைமை வகித்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராணி,துணை தலைமை ஆசிரியர் சைனி ஜேசுராணி, மீஞ்சூர் பேரூர் கழக திமுக செயலாளர் தமிழ் உதயன்,பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 192 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி, வார்டு உறுப்பினர்கள் பரிமளா அருண்குமார், நக்கீரன், அபூபக்கர், சங்கீதா சேகர், ராஜேந்திரன்,அற்புததாஸ், அத்திப்பட்டு புருஷோத்தமன்,குரு சாலமன், வல்லூர் அரவிந்தன்,நந்தகுமார், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
ai in future agriculture