மீஞ்சூர்: சைக்கிளில் மோதியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு; பெற்றோர் மீதும் தாக்குதல்

மீஞ்சூர்: சைக்கிளில் மோதியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு; பெற்றோர் மீதும் தாக்குதல்
X
மீஞ்சூர் வழுதிகைமேடு கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் மோதிய நபரை தட்டிக்கேட்ட வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது பெற்றோரையும் கும்பல் தாக்கியது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வழுதிகைமேடு கிராமத்தில் வசிப்பவர் சிவப்பிரகாசம் (21). அவரது வீட்டின் அருகே தெருவில் நின்று கொண்டிருந்த பொழுது அதே தெருவில் வசிக்கும் சஞ்சய் என்பவர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து சிவப்பிரகாச மீது மோதி உள்ளார். அதை கேட்டதற்கு சிவபிரகாசத்தை மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்துசிவப்பிரகாசம் அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.

பின்பு சஞ்சயிடம் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு இன்னும் சிறிது நேரத்தில் உன்னையும் உன் மகனையும் என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். மீண்டும் மாலை, அடையாளம் தெரியாத 3 நபர்களுடன் சிவப்பிரகாசம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சஞ்சய் சிவபிரகாசத்தை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலை மற்றும் கைகளில் வெட்டினர். இதையடுத்து அவரது தந்தை, தாயையும் தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதைகண்ட 4 பேரும் ஓடி தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சயை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!