மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
X

மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்.

மீஞ்சூர் பேரூராட்சி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேரூராட்சி மன்ற வளாகத்தில் சிலை வைப்பது குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெற்றிஅரசு , துணைத் தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் முக்கியத் தீர்மானமாக பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் குடிதண்ணீர்,சாக்கடை கால்வாய்,சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

மீஞ்சூர் பஜார் வீதியில் பேரூராட்சி நிர்வாகம் அனுமதித்ததை விட கூடுதலான இடத்தில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதால் வாகன நெரிசல், விபத்து உள்ளிட்டவை நடப்பதாகவும் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது,

பஜார் பகுதியில் பொது கழிப்பிடம் அமைக்க கோரியும், ஆடு அடிக்கும் தொட்டி அமைக்கவும், குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் அபூபக்கர், சுகன்யா, துரைவேல் பாண்டியன், பரிமளா அருண்குமார், ரஜினி, உள்ளிட்ட 13 கவுன்சிலர்களும், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் கோபி, பணியாளர்கள் மொய்தீன், கோபி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் வார்டு கவுன்சிலர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் வழங்கியதற்காக வார்டு கவுன்சிலர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!