வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து  நகை பணம் கொள்ளை
X
மீஞ்சூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை ரொக்க பணம் கொள்ளையடித்து சென்றனர்

மீஞ்சூரில் வீட்டின் பூட்டை உடைத்து 70சவரன் நகை, 40ஆயிரம் கொள்ளை. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பகுதியை சேர்ந்த தேன் பிரபாகர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்றிரவு வழக்கம் போல கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற தேன் பிரபாகர் இரவு உணவு எடுத்த பின்னர் தமது வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டில் தூங்கி உள்ளார். இன்று காலையில் தேன் பிரபாகரனின் தாய் வெளியே வந்து தமது மகன் வீட்டை பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து மகன் தேன் பிரபாகருக்கு தகவல் கொடுத்து இருவரும் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த பீரோ கதவை உடைக்கப்பட்டு அதிலிருந்த 70.சவரன் தங்க நகைகள், 50ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீஞ்சூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் வைத்திருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். அருகருகே வீடுகள் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Tags

Next Story