மீஞ்சூர் ஒன்றிய மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள்..!
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுமார் 35 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மீஞ்சூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,அத்திப்பட்டு, தேவம்பட்டு,காட்டூர்,மெதூர் ஆகிய 5.ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் இதய சுருள் படம் எடுக்கும் கருவி, நவீன ரக உயிர் காக்கும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், அவசர சிகிச்சைக்கான உயர் ரக கருவிகள், பிரசவம் பார்க்கும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ஏராளமான உபகரணங்களை என்.டி.இ.சி எல் பெரு நிறுவன சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் மகேந்திரனிடம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ்,குமார்,மருத்துவர்கள் ரவி சந்தோஷ்,ரம்யா,திவ்ய பிரியா,மது சுதர்சனன், ஒன்றிய கவுன்சிலர்கள் அன்பு,கதிரவன் மருத்துுவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu