கள்ளக்காதல் விவகாரத்தில் மூன்று கொலை: குற்றவாளி கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் மூன்று கொலை: குற்றவாளி கைது
X

படம்

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மற்றும் அவரது குழந்தைகளை கொன்று தலைமறைவான குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த இளைஞர் வசித்து வந்துள்ளார். அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இவருடன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸாமை மாநிலத்தை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் தமது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அருகில் உள்ள இருளிப்பட்டு என்கின்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

குட்டுலு தம்முடன் பணியாற்றும் துவர்க்கா பார் மனைவி சுமிதா பாருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி கள்ளக்காதலன் வீட்டிற்கு வந்தபோது ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியின் குழந்தைகள் சிவா (4), ரீமா (1) ஆகிய இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்து கள்ளக்காதலி சுமிதா பாரையும் வெட்டி, தலையில் தாக்கி குட்டுலு அங்கிருந்து தப்பித்தான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுமிதா பாரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் கடந்த மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமிதா பாய் 10ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மூன்று கொலை சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதலில் ஈடுபட்டுனர். பீகாரில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலின் பெயரில் கொலையாளி குட்டுலுவை கைது செய்த தனிப்படையினர், அவரை தமிழ்நாடு அழைத்து வந்து கள்ளக்காதலி மற்றும் குழந்தைகள் என மூவரின் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மட்டும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story