மின் கம்பங்கள் சாய்ந்து, சரி செய்யாததால் 150 ஏக்கர் நெல் விவசாயம் பாதிப்பு..!

மின் கம்பங்கள் சாய்ந்து, சரி செய்யாததால் 150 ஏக்கர் நெல் விவசாயம் பாதிப்பு..!
X

சாய்ந்து கிடக்கும் மின் கம்பம் 

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே காட்டாவூரில் மின் கம்பங்கள் சாய்ந்து ஒரு மாத காலமாகியும் சரி செய்யப்படாததால் சுமார் 150 ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள காட்டாவூர் கிராமத்தில் மூன்று போக விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென கோடையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் தோப்புக்கொள்ளை பகுதி அருகே விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்தன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்துக்கு தகவல் அளித்தனர்.

ஆனால், ஒரு மாத காலம் ஆகியும் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளன. இந்த இரண்டு மின்கம்பங்களில் செல்லும் மின்சாரத்தால் அப்பகுதியில் சுமார் 150 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. அந்த நிலங்களில் குறுவை சாகுபடிக்கான விவசாயப் பணிகள் நடந்து வருகிறது. நாற்றுகள் விடப்பட்டு நடவு செய்யும் நேரமான இந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால் நிலங்களில் தண்ணீர் விட முடியாமலும் நடவுக்கு தயாரான நாற்றுகளை நிலங்களில் நட முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மேலும் நடுவதற்கு தயாராக உள்ள நாற்றுகளும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து சேதமாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதனால் 150 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோடை மழைக்கு சாய்ந்துள்ள மின்கம்பங்களை உடனடியாக சரி செய்து மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important in business