பெரியபாளையம் விக்னேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

பெரியபாளையம் விக்னேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம்
X

கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள், அடுத்த படம் விழாவில் கலந்துகொண்டு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜனுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூர்ண கும்பம் மரியாதை செய்தபோது.

பெரியபாளையம் அருகே ஜங்காலு விக்னேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பெரியபாளையம் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஜங்காலு விக்னேஸ்வரர் திருக்கோவில் மகா மகா கும்பாபிஷேக விழாவில் . திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஜங்காலு விக்னேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 3.ஆம் தேதி சிவாச்சாரிகள் ஆலயம் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம்,நவகிரக ஹோமம்,கோ பூஜை, வாஸ்து சாந்தி, மகா உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.விழாவின் முன்னிட்டு இரண்டாம் யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூர்ணாஹீதி, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, யாக வேள்வி நடத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களைக் தலையில் சுமந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க கோவில் சுற்றி வளம் வந்து விமான கோபுர கலசத்தின் மீது ஊற்றி புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், மஞ்சள், குங்குமம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து தீப, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் முனிபாலன், ஜான் மாவட்ட பொருளாளர் ரமேஷ்,ஆரணி நகர செயலாளர் முத்து, பொருளாளர் கரிகாலன், திமுக நிர்வாகி ஏ.ஜி. ராஜேந்திரன், மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு விக்னேஸ்வரர் பெருமானை வழிபட்டனர்.

பின்னர் கும்பாபிஷேக விழாவில் பெருந்திரளாக கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!