பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு
X

பொன்னேரி அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு. வேல் அலகு குத்தியும், பால் குடம் சுமந்தும், தேரை இழுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு

பொன்னேரி அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு. வேல் அலகு குத்தியும், பால் குடம் சுமந்தும், தேரை இழுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபட்டனர். பொன்னேரி அருகே ஆரணி கிராமத்தில் அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வேல் காவடி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால்குடம் எடுத்து கொண்டு பாதயாத்திரையாக சென்று வழிபாடு நடத்துவதுவர். 30ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று ஆரணியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் காப்புக் கட்டிக்கொண்ட பத்தர்கள் அலகு குத்திக்கொண்டனர். எலுமிச்சை, வேல், காய்கனிகள், உள்ளிட்டவற்றை தங்களது உடலிலும் வாயிலும் அலகாக குத்திக்கொண்டனர். மேலும் கூண்டுக்காவடி, எடுத்தும், முருகப்பெருமான் திருஉருவம் கொண்ட தேரினை தங்களது உடலில் கட்டி பக்தர்கள் இழுத்து சென்றனர். அலகு குத்திக்கொண்ட பக்தர்கள் ஆரணியில் இருந்து சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். பெண்கள் தங்கள் தலைகளில் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர். காவடிகளை, சுமந்தும், அலகு குத்தியும், கூண்டு காவடியை சுமந்தவாறு பக்தர்கள் அரோகரா, அரோகரா முழக்கங்களை எழுப்பியவாறு முருகனை அருள் பெற்றனர். பக்தர்கள் அலகு குத்தி, சரண கோஷங்களுடன் காவடி எடுத்து சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!