பொன்னேரியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு..!

பொன்னேரியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு..!
X

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவுநாள் அனுசரிப்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பொன்னேரி நகர திமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞ்ர் கருணாநிதியின் 6 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொன்னேரி நகர திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் .

திமுக முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 6வது நினைவுநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.பேரறிஞர் அண்ணா சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து தாலுகா அலுவலக சாலையில் 18.வது வார்டு செயலாளர் உமாபதி ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் நகர நிர்வாகிகள் செங்கல்வராயன், வாசுதேவன், ராமலிங்கம், நீலகண்டன், மாவட்ட ஆதி திராவிட அணியின் துணை அமைப்பாளர் முருகானந்தம், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் தீபன், முன்னாள் கவுன்சிலர் ஜோதீஸ்வரன், சிவஞானம், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!