வல்லூர் அனல் மின் நிலைய பொறியாளர் வீட்டில் 92 சவரன் நகை கொள்ளை

வல்லூர் அனல் மின் நிலைய பொறியாளர் வீட்டில் 92 சவரன் நகை கொள்ளை
X

கொள்ளை நடத்த வீட்டில் விசாரணை செய்த போலீசார். 

வல்லூர் அனல் மின் நிலைய பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் இங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.

சுரேஷ் என்ற பொறியாளர் தமது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சுரேஷ் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 92சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். பொறியாளர் மகளின் திருமணத்திற்காக சேமித்து வைக்கப்பட்ட நகைகளை திருடிய மர்ம கும்பல் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!