ராகுல் காந்தியை அரசியலில் இருந்து அகற்றி விடலாம் என்பது நகைப்புக்குரியது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் சதா சிவலிங்கம்
அதானி ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பாராளுமன்றத்தில் பேசக் கூடாது என்பதாலேயே ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் இந்த தீர்ப்பு முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் சதா சிவலிங்கம் குற்றம் சாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் சதா சிவலிங்கம் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: அதானி ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பாராளுமன்றத்தில் பேசக் கூடாது என்ற காரணத்தாலேயே ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார். தடை கோரப்பட்ட வழக்கை தூசி தட்டி ஒரே மாதத்தில் தண்டனை விதித்து, அடுத்த நாளே தகுதி நீக்கம் செய்துள்ளதாக வும் சாடினார்.
ராகுல்காந்தி வழக்கில் நீதிபதியை மாற்றி தீர்ப்பு பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ராகுல்காந்தியை அரசியலில் இருந்து ஒழித்து விடலாம் என நினைப்பது ஏளனத்திற்குரியது. ராகுல் காந்தியின் நடை பயணத்தால் ஏற்பட்ட எழுச்சியை கண்டு பாஜக அஞ்சி நடுங்குவதாகவும், அதனொரு பகுதியாகவே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தில் உள்ள 20000கோடி ரூபாய் பினாமி பணம் பாஜவில் உள்ள முக்கியஸ்தர்களின் பணம் என புகார் தெரிவித்திருந்தார். இந்த வாய்மொழி அவதூறு குற்றச்சாட்டிற்காக ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது அதிகார துஷ்பிரயோகத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு எனவும் சாடினார். குஜராத்தில் வழக்கு தொடுத்தவரே அதற்கு தடை வாங்கிய நிலையில் திட்டமிட்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதாக சாடினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu